கோவையில் பிரபல KMCH மருத்துவமனையில் நடந்த கொலை.. காவலாளிகள் 12 பேர் அதிரடி கைது : பகீர் சம்பவம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 1:26 pm

கோவை சிட்ரா பகுதியில் தனியார்(கேஎம்சிஎச் ) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது.இந்த மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த மருத்துவமனை காவலாளிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் காயமடைந்த அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் காந்திமா நகர் பகுதியில் சேர்ந்த ராஜா என்ற மணி என்பவரும் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: பிரபல தனியார் பள்ளியில் மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்தில் கையாடல்.. ரூ.26 லட்சத்தை ஏப்பம் விட்ட பெண் பணியாளர்!

இதனை அடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் ராஜாவின் மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவலாளி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .

தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவரது மனைவி தெரிவிக்கையில் சிகிச்சைக்காக அங்கு சென்றவரை அடித்து கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!