தினமும் இரவு குடி, கும்மாளம்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம் : ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 1:55 pm

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னதுரை. அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் அனிதாவுக்கும் சின்னதுரைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இதை அடுத்து சின்னதுரையும், அனிதாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சின்னதுரை அனிதாவுக்கும் மது பிடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. ஆனால் அனிதா மது குடிப்பது சின்னதுரை பிடிக்கவில்லை.

மேலும் அனிதா சின்னதுரையின் மகள், மகனிடம் பாசம் காட்டாமல் வெறுப்புடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் – மனைவி இரண்டு பேரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று அனிதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சின்னதுரை தெரிவித்தார்.

ஆனால் தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அனிதாவின் மகன் கார்த்திக் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அனிதாவின் உடலை மீட்ட பிரத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அனிதாவின் கழுத்தை இறுக்கிக் கொன்று தூக்கில் தொங்க விடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சின்னதுரையை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அனிதா தன்னுடைய முதல் மனைவியின் குழந்தைகளிடம் பாசம் காட்டாமல் வெறுப்புடன் நடந்து வந்தார்.

மேலும் குடிபோதையில் அடிக்கடி தகராறு ஈடுபட்டதால் கொலை செய்ததாகவும், போலீசில் சிக்காமல் இருக்க அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடியதாக அவர் கூறி உள்ளார். கைதான சின்ன துரையை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 480

    0

    0