பிஞ்சுக் குழந்தைகள் கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூரச் செயல் : மதுரையில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 2:22 pm

மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி இவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வந்த நிலையில் இவர்களுக்கு ரக்ஷனா (வயது 7) மற்றும் ரக்ஷிதா (வயது 5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக தந்தை சேதுபதி காலை கூர்மையான ஆயுதத்தால் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் படிக்க: செந்தில் பாலாஜி தியாகமா செஞ்சாரு? திமுக தான் உள்ளயே தள்ளுச்சு : சீமான் விமர்சனம்!

மேலும் தற்கொலைக்கும் இயன்ற சேதுபதி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி ராஜேஸ்வரிடம் அண்ணா நகர் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையே இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு ஏற்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!