ஓடும் ரயிலின் ஓசையை மறக்க செய்த இசைக்குயில் : சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்திய ‘பாடும் நிலா’ ஓய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 2:30 pm

நீலகிரி மலை ரயில் பயணியரை மகிழ்வித்து ‘பாடும் நிலாவாக’ வலம் வந்த டி.டி.ஆர். வள்ளி பணி ஓய்வு பெற்றுள்ளார்.

நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணியரை பாடல்களால் மகிழ்ச்சியடைய செய்தவர் டிக்கெட் பரிசோதகர் வள்ளி. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பட பாடல்களை பாடி, சுற்றுலா பயணிகளை கவர்ந்த வள்ளி, மார்ச் 30ல் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் நேற்று குன்னுார் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கேரள மாநிலம், ஷொர்னுாரில் 1985ல் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 2012ல் டிக்கெட் பரிசோதகருக்கான தேர்வு எழுதி, கோவை தகவல் மையத்திற்கு மாற்றப்பட்டேன்.

2016 முதல் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில், டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினேன். ரயிலில் சுற்றுலா பயணியர் சோர்வடையாமல் இருக்க, தினமும் சினிமா பாடல்களை பாடி மகிழ்விப்பேன்.

இதனால், சேலம் கோட்ட பொது மேலாளரிடம் விருது பெற்றேன். ரயில்வே அமைச்சகம் எனக்கு, ‘நைட்டிங்கேல்’ விருது வழங்கியது. எனது 37 ஆண்டு
பணியில் நீலகிரி மலை ரயிலில் பணி புரிந்த காலம், வாழ்வின் பொற்காலமாக இருந்தது என அவர் கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!