ஈஷா மையத்தில் இருந்து வெளியேறிய பெண் மர்ம மரணம்? உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு முத்தரசன் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 2:12 pm

சுபஸ்ரீ மரணத்தில் ஜக்கிதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் உள்ள கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஈஷாவின் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. தற்கொலை, நில ஆக்கிரமிப்பு, வனவிலங்கு வேட்டையாடுகிறார்கள், என பல்வேறு குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் 11முதல் 18 வரை சைலண்ட் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுபஸ்ரீ ஈசாவில் பயிற்சிக்காக வருகிறார். நிகழ்வு முடிந்து மனைவியை அழைத்து செல்ல கணவர் வரும்போது அந்த பெண் வரவில்லை.

இது தொடர்பாக கணவர் 18ம் தேதி புகார் அளித்துள்ளார்.1 ம்தேதி அழுகிய நிலையில் சுபஸ்ரீ கண்டெடுக்கப்பட்டார். அவசர அவசரமாக பிரேத பரிசோதனை அன்றே செய்யப்பட்டது.

18ஆம் தேதிக்கும் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் டிசம்பர் 24 ல் சாமியார் உரையாடி கணவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் செல்வாக்கு மிக்கவர், பிரதமரே இங்கு வருகிறார்.பாஜக தேசிய தலைவர் நட்டாவும் ஈஷாவிற்கு வந்தார். ஒன்றிய அரசின் செல்வாக்கு பெற்ற நிறுவனமாக ஈஷா உள்ளது.

சுப ஸ்ரீயின் மரணம் மறைக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு ஐயம் உள்ளது. ஜக்கி செல்வாக்குடன் இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம், காவல்துறையின் அமைதி புதிராக உள்ளது. மாநில அரசு நீதிபதியை தேர்வு செய்து, முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் படுகொலைகளை நிறுத்த முடியும்.

வரும் 6 ம் தேதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் விசாரணை வலியுறுத்தி கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பலரின் பினாமியாக ஈஷா செயல்படுகிறது. ஈஷா விவகாரத்தில்
மற்ற அரசியல் கட்சிகளை சந்தித்து பேசி அனைத்து முன் முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.

பணம் செல்லாது என்ற அறிவிப்பால் அரசு அறிவித்த நோக்கம் செயல்பட்டதா.?கருப்பு பணம் அதன் மூலம் சட்டபூர்வமாக வெள்ளை பணமாக்கப்பட்டது. இதில் சாதாரண ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். 4 நீதிபதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர். கருப்பு பணம் ஒழியவில்லை.

ஆர்.பி.ஐ சுதந்திர அமைப்பு, ஆனால் மோடி ஆட்சிக்கு பின் சீர் குலைந்துள்ளது. நீதிபதிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. கார்ப்ரேட் நிறுவனங்களின் வளர்ச்சி தான் வளர்ச்சி.

ஈசா விவகாரத்தில் தமிழக காவல்துறை கோவை மாவட்ட காவல்துறை மென்மையான போக்கை கையாளாமல் இருக்க வேண்டும்.
பெண்கள் மீது விரும்பத்தகாத வேலையில் யார் ஈடுபட்டாலும் தவறுதான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் கம்பெனி வசூல் தவறு. யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஈசாவில் கணவரை அழைத்து பேசி ஜக்கி உத்திராட்ச மாலை போட்டுள்ளார்.ஒன்றாம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ஏன் அவ்வளவு அவசரமாக போஸ்ட் மாடம் செய்தார்கள். செல்வாக்கு பெற்றவர்களுக்கு ஒரு நீதியா

ஜக்கி வாசுதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏன் பத்திரிக்கைகள் எங்களது ஈசாவின் அறிக்கையை போடவில்லை ஏன் தயங்குகிறீர்கள் என தெரிவித்தார்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!