காளைகளின் பெயர், ஊர் லிஸ்ட் தயார்.. காத்திருக்கும் 1,000 காளைகள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி பேட்டி!
Author: Udayachandran RadhaKrishnan14 January 2024, 5:47 pm
காளைகளின் பெயர், ஊர் லிஸ்ட் தயார்.. காத்திருக்கும் 1,000 காளைகள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி பேட்டி!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியானது அவனியாபுரத்திலும் இரண்டாவது பொட்டி பாலமேட்டிலும் மூன்றாவது போட்டி அலங்காநல்லூர் நடைபெற உள்ளது.
முதல் போட்டி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இடத்தில் நடை பெறும் ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு நடைபெற்று உள்ளது குறித்த கேள்விக்கு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்பாடுகளில் உள்ள சின்ன சின்ன தவறுகளை உடனடியாக சரி செய்ய கூறியுள்ளோம்.
வழக்கத்தைவிட என்னென்ன ஏற்பாடுகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு செய்துள்ளீர்கள் என்பது குறித்த கேள்விக்கு, குறைந்தபட்சம் ஆயிரம் காளைகளையாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த வருடம் செய்துள்ளோம்.
வாடிவாசல் பின்னால் கூடுதலாக கதவு வைக்கப்பட்டுள்ளது அதனால் காளைகள் அதிகம் இறக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு, 600 முதல் 700 காளைகளை வாடிவாசல் பின்னால் கதவிலிருந்து இழுக்கும்போது காளைகள் பின்னால் சென்று தள்ளுவாடி ஆகிவிடும்.
எனவே இந்த வருடம் காளைகள் தள்ளுவாரியாகாமல் இருப்பதற்காக இந்த வருடம் வாடிவாசல் பின் கதவு பெரிதாக அமைக்கப்பட்டு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாடிவாசல் முன்னது பெருநாள் மாடு வாடி வாசலுக்குள்ளே சுற்றும் தற்போது குருகளாக வாடிவாசல் அமைத்துள்ளதால் மாடு நேரடியாக வாடிவாசல் விட்டு வெளியே வந்துவிடுவது போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
டோக்கன் தருவதில் தாமதம் ஏற்படுவதால் காளைகளை கொண்டு வருவது சிரமம் ஏற்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு
மொத்தத்தில் ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும், 3400 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே காளைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் தற்போது அலுவலகம் சென்ற உடனே எவ்வளவு காளைகள்,எவ்வளவு மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதை அறிவித்து விடுவார்கள்.
மாடு பிடி வீரர்களுக்கு டோக்கன்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு
அவனியாபுரத்தில் தகுதியான மாடுபிடி வீரர்கள் 650 பேர் இருக்கிறார்கள். தேர்வுகள் செய்து 600 மாடுபிடி வீரர்கள் நாளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படுகிறார்கள்.
பரிசு பொருட்களை ஜெயித்த மாடுபிடி வீரர்கள், காளையின் உரிமையாளர்களுக்கும் அவர்களின் கையில் கொடுக்காமல் தூக்கி போடுவது குறித்த கேள்விக்கு
நாங்களும் வந்து பரிசுகளை வாங்கிக் கொள்ளும்படி தான் கூறுகிறோம். காளையின் உரிமையாளர்களிடம் மாடுபிடி வீரர்களிடம் கூறுகிறோம் ஆனால் அவர்கள் மேல ஏறி வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகிறது அதனால் காளைகள் அவிழ்ப்பது தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த வருடம் நீங்கள் சொன்னது போல் பரிசுகளை அவர்கள் கையில் கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு மீது அதிக ஈடுபாடு கொண்டவர் அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தனியாக அரங்கம் அமைக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி போட்டிகள் நடப்பது குறித்து அறிவிக்கப்படும்.
உயர்நீதிமன்ற உத்தரவிட்டதன் பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஜாதி பெயர் குறிப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த வருடம் காளைகளின் பெயர், ஊரை மட்டுமே குறிப்பிடுவார்கள்.
ஜல்லிக்கட்டு காளைகளின் டோக்கன் ஸ்பான்சர்களுக்கு அதிகமாக கொடுக்கப்படுவது குறித்த கேள்விக்கு, அந்த மாதிரி எதுவும் கிடையாது, மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்கு டோக்கன் வழங்கப்பட வேண்டும். அவரு அந்த பல்வேறு மாவட்டங்களுக்கு டோக்கன் வழங்கப்பட வேண்டுமா வேண்டாமா என்று செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.
அந்த அரசியல் தலைவர்கள் இந்த அரசியல் தலைவர்கள் என்று பாகுபாடு கிடையாது மொத்தம் 1000 காளைகள் தான் ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கபடும் இதில் எந்த பாரபட்சமும் கிடையாது என்று தெரிவித்தார்.