மின்கம்பியில் சிக்கி பலியாகும் தேசிய பறவை: பறவை ஆர்வலர்கள் வேதனை..நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

Author: Rajesh
11 April 2022, 11:05 am

கோவை: மின்கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள துடியலூர்,வடவள்ளி உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளைநிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.

அப்போது,அவை மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் நேற்று கணபதி மணியகாரன் பாளையம் ஸ்டேட் பாங்கி எதிர்ப்புறம் உள்ள சாலை, இன்று காலை துடியலூர் ரேஷன் கடையின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சிக்கி தேசிய பறவையான இரு மயில்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

தொடர்ந்து தேசிய பறவையான மயில்கள் மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!