தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. மீண்டும் பாஜக ஆட்சிதான் : ஜிகே வாசன் நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 2:01 pm

தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. மீண்டும் பாஜக ஆட்சிதான் : ஜிகே வாசன் நம்பிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-சமீபத்தில் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கிறது.

நமக்குரிய தண்ணீரை விரைவாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் படிக்க: 7 சிசுக்களை காவு வாங்கிய மருத்துவமனை.. என்ஓசியே வாங்காதது அம்பலம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 350

    0

    0