ரோஜா சீரியலுக்கு வந்த புதிய தலைவலி… இனி இவருக்கு பதில் இவரா? வில்லி கேரக்டருக்கு மட்டும் ஏன் இந்த சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 1:28 pm

ரோஜா சீரியல் பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் பல கேரக்டர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் அணு கேரக்டரில் இதற்கு முன்பு ஷாமிலி நடித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் நேரங்களிலும் இந்த சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். கடைசி நேரத்தில் உடல்நிலை அதிகமாக சோர்வடைந்தது காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

அவருக்கு பதிலாக விஜே அக்ஷயா அனு கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் தற்போது அந்த கேரக்டரிடம் இவர் ஒன்றிவிட்டதாக கூறி வருகிறார்கள்.

அனு கேரக்டரில் வில்லியாக அக்ஷயா நடிப்பதால் பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார். இவரை திட்டி தீர்க்காதவரே இருக்க முடியாது என்று சொல்லலாம்.

சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரியாத பலரும் இவர் வெளியே செல்லும் இடங்களில் கூட இவரை பார்த்து முறைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதாக ஒரு பேட்டியில் இவரே குறிப்பிட்டுயிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

ரசிகர்கள் பலருக்கும் அக்ஷயாவுக்கு திருமணம் முடிந்ததே தெரியாமல் இருந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது.

சீரியலில் இவருடைய வயிறு அதிகமாக தெரியாதபடியே காட்டப்பட்டு வருகிறது. இதனால் சமூக வலைதளத்தில் இவருடைய கர்ப்பமான புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜே அக்ஷயா தனக்கு வளைகாப்பு முடிந்த செய்தியை போட்டோவோடு ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அதுவும் தற்போது நடந்து வரும் செப்டம்பர் மாதத்தில் எட்டாம் தேதியே இவருக்கு வளைகாப்பு முடிந்து விட்டது.

இதை பார்த்ததும் இவ்வளவு எளிமையாக வளைகாப்பு முடித்து விட்டாரே, அதுவும் வளைகாப்பு முடிந்து இத்தனை நாட்கள் கழித்து போட்டோக்களை பதிவிட்டு இருக்கிறாரே என்று பலர் சின்னதாக கோவப்பட்டாலும் வாழ்த்துக்கள் மட்டும் மலை போல உயர்ந்து வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 485

    0

    0