அந்த மனசு இருக்கே.. திருமண விழாவில் வந்த மொய் பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிய புதுமணத் தம்பதி!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 7:26 pm

சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது வெங்காயம் தக்காளி உள்ளிட்டவைகளை மணமக்களுக்கு பரிசாக வழங்குவது உள்ளிட்வை வைரலாகி வந்தன.

ஆனால் அந்த நிலையில் தற்போது புதுமணத்தம்பதியினர் மாற்றியுள்ளது. தேனி மாவட்டம் சக்கம்பட்டி பகுதியில் நேற்று ஹரிகரன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் சார்பில் பெறப்பட்ட மொய்ப் பனமான ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மணமக்கள் ஒன்றாக இணைந்து மதுரையில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மூலமாக புதிதாக ஆரம்பிக்க உள்ள புற்றுநோய் பிரிவின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக வழங்கினார்கள்

திருமணத்தின் போது பெறப்பட்ட மொத்த பணத்தையும் வழங்கிய திருமண தம்பதியினருடைய செயலுக்கு உறவினர்கள் தெளிவாக பாராட்டினர்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ