இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக்… போட்டி போட்டு விலையை ஏற்றும் பால் நிறுவனங்கள் : அதிர்ச்சி தந்த ஆரோக்யா!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 12:51 pm

ஆவின் பால் தமிழக அரசு நிறுவனத்தின் மூலம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு தினமும் 26.4 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுவே தனியாரை எடுத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு ஒன்றே கால் கோடி லிட்டர் விற்பனையாகிறது. பல தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் பால் விற்பனை செய்கின்றன.

ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது. தமிழ்நாட்டின் பால் தேவையில் 84 சதவீதம் அதாவது 1.25 கோடி லிட்டரை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்வது வருகிறது.இந்நிலையில் ஹட்சன் நிறுவனம் தயாரித்து விற்று வரும் 1.5 லிட்டர் ஆரோக்கியா ஆரஞ்சு பாக்கெட் ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பச்சை நிற முடி போட்ட பிளாஸ்டிக் கேனில் ரூ.100க்கு விற்கப்படும் பாலும் ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ. 105க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் உத்தரவிட்டது.

பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டது. அதேப்போல் எருமைப்பால் கொள்முதல் விலை 41-ல் இருந்து 45-க்கு உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.60ஆக மாற்றி அமைக்கப்பட்டது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 474

    0

    0