தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பாமக பிரமுகருக்கு விழுந்த அரிவாள் வெட்டு : கடலூரில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 5:59 pm

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர்.இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சென்னையில் வெட்டிக் கொலை செய்யயப்பட்ட சம்பவமே இன்னும் ஆறாத வடுவாக உள்ள நிலையில் பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?