அரசு மருத்துவமனையில் ஊசி போடும் இரவு நேர காவலாளி.. செவிலியர் வராததால் நடந்த அதிர்ச்சி.. வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 11:56 am

அரசு மருத்துவமனையில் ஊசி போடும் இரவு நேர காவலாளி.. செவிலியர் வராததால் நடந்த அதிர்ச்சி.. வீடியோ வைரல்!!

வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் வராததால் இரவு நேர காவலாளி நோயாளிக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்து வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் சரிவர பணிக்கு வராததால் இரவு நேர காவலாளியாக தேவேந்திரன் என்பவர் பணி புரிந்து வருகிறார்,

அங்கு வரும் நோயாளிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு ஊசி போடுவதும் ஒரு சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதாகவும் தற்பொழுது புகார் எழுந்துள்ளது.

மருத்துவர் எங்கே சென்றார் என்று நோயாளிகள் கேள்வி கேட்டால் நான்தான் இங்கு என்று கூறுவதாகவும் பெண்களுக்கு பிரசவம் பார்த்து வருவதால் அச்சத்திலும் கூச்சத்திலும் வெளியில் யாரிடம் கூறாமல் செல்வதாக தகவல் கூறப்படுகிறது.

எனவே இவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டுவிட்டு பணம் பெறுவதாகும் புகார் எழுந்துள்ளது.

https://vimeo.com/873603125?share=copy

மருத்துவமனை இரவு நேர காவலாளி தேவேந்திரன் நோயாளிகளுக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 441

    1

    0