1000 அடி உயர மலைகோவில் உச்சியில் தீ வைத்த வடமாநில இளைஞர்? வளைத்து பிடித்த பொதுமக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan14 February 2023, 9:19 pm
மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் உள்ள பசுமலை இந்த பசுமலை உச்சியில் கபாலீஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்
இந்த மலைப்பகுதி 645 படிக்கட்டுகளுடன் சுமார் 1000 அடி உயரம் உள்ளது. இந்த மலையில் இன்று மாலை முதல் திடிரென தீவிபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து மலையில் இருந்த மரங்கள் மீது தீ எரிய தொடங்கி மளமளவென காய்ந்த மரங்களில் பற்ற தொடங்கியது
இதனால் தீயானது கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் மாடக்குளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்த தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மலையில் பொதுமக்கள் ஏறிச்சென்று பார்த்தபோது அங்கு பீகாரை சேர்ந்த சோட்டுகுமார் மண்டல் என்ற இளைஞர் கையில் 10க்கும் மேற்பட்ட தீப்பெட்டிகளுடன் இருந்த நிலையில். அவரை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்
இவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்று திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீவிபத்தில் மலையில் வாழும் மயில், முயல் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கும் நிலையில் உள்ளது.
சம்பவ இடத்திற்கு கண்மாய் கரைபாதை என்பதால் தீயணைப்பு துறை வாகனம் தற்போது வரை வரவில்லை. தீ காட்டு தீ போல மெல்ல பரவி வரக்கூடிய நிலையில் விரைவில் அணைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது