டைல்ஸ் ஒட்ட வந்த வடமாநில இளைஞர் படுகொலை.. தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 1:18 pm

டைல்ஸ் ஒட்ட வந்த வடமாநில இளைஞர் படுகொலை.. தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்.!!!

கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 5 பேர் தனியாக ஒரு பகுதியில் உறங்கியதாகவும் 23 வயது ரிங்கு குமார் என்ற இளைஞர் தனியாக படுத்து உறங்கி உள்ளார்.

அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டு இருந்த ரிங்குக்மாரின் சட்டை பையில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றார். உடனடியாக விழித்துக் கொண்ட ரிங்குக்குமார் கூச்சலிட்டார்.

இதைக் கேட்டு அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேர் வருவதற்குள் அந்த மர்ம நபர் தான் வைத்து இருந்த கத்தியால் ரிங்கு குமாரை கழுத்தில் மூன்று முறை குத்தி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினார்.

உடனடியாக ரிங்குக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…