மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கித் தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரி : தாட்கோ அலுவலகத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 4:45 pm

பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவு எழுத்தரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடிவடிக்கை எடுத்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பதிவு எழுத்தர் சுரேஷ் குமார் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வட பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர் தாட்கோவில் தனது மனைவிக்கு மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெறுவதற்காக பதிவு எழுத்தர் சுரேஷ்குமாரை அணுகி உள்ளார்.

அப்போது சுரேஷ்குமார் குணசீலனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து குணசீலன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரை அணுகி புகார் தெரிவிக்கவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் ரூபாயை குணசீலனிடம் கொடுத்து சுரேஷ்குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பினர்.

இதனை அடுத்து சுரேஷ்குமார் 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 549

    0

    0