வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் செய்த துணிகரம்.. கோவையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 4:30 pm

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் செய்த துணிகரம்.. கோவையில் பகீர்!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5 சவரன் நகைகளை பறித்த மூன்று பேர் 4மணி நேரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள கனேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சின்னம்மாள் இவரது மருமகள் (வேலுமயில்) தேனி மாவட்டத்தில் நீதிபதியாக இருந்து வருவதால் கணவருடன் தேனியில் உள்ளார்.

இதனால் சின்னம்மாள் மட்டும் கனேசபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதேசமயத்தில் தனியாக இருந்தாலும் இட்லிக்கு மாவு ஆட்டி அதனை விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்து கார் லிவரை கொண்டு மூதாட்டியை தலையில் தாக்கி விட்டு மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு மூவரும் தப்பி ஓடினர்.

பின்னர் இது குறித்து மூதாட்டி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார் அது குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய புலன் விசாரணையில் குற்றவாளிகளை கண்டறிந்து குற்றம் நடந்து நான்கு மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் சிறுமுகை பாரதி நகர் பகுதியை சேர்ந்த சர்மா என்பவர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி மாவு வாங்க சர்மா என்பவர் மூதாட்டி கடைக்கு சென்று வந்த நிலையில் கழுத்தில் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்துள்ளான்.

இதற்காக மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்த முகமது அம்ரித் மற்றும் 17வயது சிறுவன் ஒருவன் என இரண்டு பேரை சேர்த்து கொண்டு மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டு நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றசம்பவம் நடந்து நான்கு மணி நேரத்தில் திறன்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!