ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர்.. திடீரென மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 1:59 pm

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் குமரேசன்-55.இவர் ககொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

அப்பகுதியில் 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் போலி (பட்டா) சான்றிதழ் வாங்கி அபகரித்ததாக கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் .

இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?