சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

Author: kavin kumar
1 February 2022, 7:31 pm

சென்னை : வண்ணாரப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சர்தார் செரிப். இவர் சில நாட்களாகவே அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கண்கொத்தி பாம்பாய் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததை தனக்கு சாதகமாக, பயன்படுத்தி கொண்ட முதியவர், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு வலி ஏற்பட்டு அழுதுகொண்டே தாயிடம் சென்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் முதியவர் சர்தார் செரிப்பை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…