அவசர அவசரமாக சாலையை கடக்க முயன்ற முதியவர் : கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார்.. திக்திக் காட்சி!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 6:23 pm

திண்டுக்கல் : நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதி முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் என்னுமிடத்தில் காசிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் 100 நாள் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது நான்கு வழிச்சாலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் திருவனந்தபுரத்தை சேர்ந்த விவேக் என்பவரும் அவரது மனைவியும் வந்துள்ளனர். காரை விவேக் ஓட்டி வந்துள்ளார்

வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரம் என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென திண்டுக்கல் – கரூர் தேசிய நான்கு வழிச்சாலையை பெரியசாமி கடக்க மறுபுறத்தில் இருந்து ஓடி வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் அவர் மீது லேசாக மோதியது சாலையை கடக்க பெரியசாமி ஓடி வருவதை பார்த்த காரின் ஓட்டுனர் விவேக் துரிதமாக செயல்பட்டு அவர் மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திருப்பினார். அப்போதும் காரின் முன் பக்க பகுதியில் பெரியசாமி மீது மோதியது. இதில் பெரியசாமி அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

மேலும் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகன போக்குவரத்து ரோந்து காவலர்கள் உடனடியாக பெரியசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துரிதமாக செயல்பட்டு காரை இயக்கிய ஓட்டுனர் விவேகால் பெரியசாமி சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

https://vimeo.com/689669057

தற்போது இது குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1296

    0

    0