காலர்ல காசு போடுங்க… காலுறையை எடுத்திட்டு போங்க : ஆன்லைன் பரிவர்த்தனையை பயன்படுத்திய முதியவர் : தள்ளாடும் வயதிலும் தளராத நம்பிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2022, 11:03 am
கோவையில் காலுறை விற்பனை செய்து வரும் முதியவரின் ஆன்லைன் பரிவர்த்தனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
வளர்ந்த நாடுகளிலும் இந்தியாவில் புழங்கும் அளவிற்கு மற்ற நாடுகளில் கரன்சி புழக்கம் கிடையாது. இதனால் அரசும், வங்கிகளும் ஆன்லைன், கடன் அட்டை, டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவித்தன.
இந்நிலையில் வங்கிகளில் ஆன்லைன் மூலமான பரிவர்த்தனையில் ஓரளவு பாதுகாப்புத் தன்மை உறுதியானதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமான வர்த்தகம் என்பது அதிகரித்துள்ளது.
மக்கள் வெளியில் செல்லும் பொழுது கையில் பணம் இல்லை என்றால் இந்த ஆன்லைன் பரிவர்த்தனையான UPI எனப்படும் Gpay, phonepay, paytm உள்ளிட்ட செயலி மூலம் ஹோட்டல், டீ கடை, மளிகை கடை, பெட்ரோல் பங், துணிகடைகள் என தாங்கள் வாங்கும் பொருளுக்கு பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இப்படி பட்ட இந்த செயலியை கடந்த 30 வருடமாக எழுதுகோல் மற்றும் காலுறை விற்று வரும் சாலையோர வியாபாரியான கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்த முதியவர் ஜேக் அப்துல் என்பவர் ஆன்லைன் பரிவர்த்தனையை கழுத்தில் மாட்டிக் கொண்டு விற்பனை செய்து வருகிறார்.
தள்ளாடும் வயதிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் இந்த முதியவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியாபாரம் செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.