மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. நகைகளை திருடி லாட்ஜில் உல்லாசமாக இருந்த குற்றவாளிக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 5:38 pm

மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. நகைகளை திருடி லாட்ஜில் உல்லாசமாக இருந்த குற்றவாளிக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (65). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முத்துலட்சுமி வீட்டின் மாடிப்படி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் 54 என்பவர் முத்துலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து சண்முகசுந்தரத்தை கைது விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சம்பவத்தன்று சண்முகசுந்தரம் மூதாட்டி முத்துலட்சுமி வீட்டுக்குள் நுழைந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் இதை யாரிடமாவது சொல்லி விடுவார் என நினைத்து கொலை செய்துள்ளார் . பின்னரும் பாலியல் பலாத்காரம் செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் நகையை விற்ற பணத்தை வைத்து கொண்டு உல்லாசமாக பல்வேறு இடங்களுக்கு சென்று லாட்ஜில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளார். தன்னை காவல்துறை தேடுவதை கூட தெரிந்தும் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார்.

தனது உறவினர் திருமணத்துக்கு சென்ற போது அங்கிருந்த உறவினர்கள் சண்முகசுந்தரம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இந்த அடிப்படையில் காவல்துறையினர் மார்த்தாண்டத்தில் இருந்த ஒரு லாட்ஜில் உல்லாசமாக இருந்த போது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரத்தை காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் முகத்தை காட்டாமல் குற்றவாளி மறைக்கும் விதமாக முகத்தில் போர்வையை மூடிக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது காவல்துறையை குற்றவாளிக்கு பாதுகாப்பாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரம் பின்னர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கையில் இருந்து வந்த நபர் உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 504

    0

    0