திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (27) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மொபைல் ஆப் மூலம் கடன் வழங்கும் செயலி ஒன்றில் ராஜேஷ் கடன் வாங்கி, வாங்கிய தொகை முழுவதையும் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் கடன் பெற்ற செயலி மூலமாக மேலும் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு தொடர்ந்து தொல்லை தரப்பட்டுள்ளது. ராஜேஷ் பணத்தை செலுத்தாத நிலையில் அவரது போட்டோவை நிர்வாணமாக்கி ராஜேஷ் போல சித்தரித்து அதை அவரது மொபைலுக்கே அனுப்பி பணத்தை திருப்பித் தரவில்லை எனில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவதாக அவர் கடன் பெற்ற செயலி மூலம் மிரட்டப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ராஜேஷ் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரும் இதுபோன்று ஆன்லைன் செயலிகள் மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.