மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி… திக்குமுக்காடி போன தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி : கண்கலங்கிய ரஜினி…!!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2022, 1:56 pm
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து தங்கள் பயணத்தை தொடரப்போவதாக அறிவித்ததில் இருந்து பல செய்திகள் வெளியாகி வருகிறது. இதில் தனுஷ்க்கு ஆதரவாகவம், ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பிரிய மாட்டார்கள் என தனுஷின் தந்தையே அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த செய்தி உண்மையாகதா என பல பேரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் ஐதாராபாத்தில் வெவ்வேறு இடங்ளில் உள்ள ஓட்டல்களில் தங்கி அவரவர் திரைப்பட வேலைகளை கவனித்து வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் தோளுக்கு மேல் வளர்ந்த இருபிள்ளைகள் இருப்பதால் விவாகரத்து முடிவை கைவிட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் மூத்த மகனான யாத்ரா கேட்ட ஒரு கேள்வியால் தற்போது இருவரும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயதாகிறது. இளைய மகன் லிங்காவுக்கு 11 வயதாகிறது.
இந்த நிலையில் மூத்த மகனான யாத்ராவிடம் தாய் தந்தை பிரிந்து போனால் நீ யாருடன் இருக்க விரும்புகிறாய் என கேட்டுள்ளனர். இதே கேள்வியை என் அம்மா மற்றும் அப்பாவிடம் அவர்களது தாய் தந்தை கேட்டால் என்ன பதில் சொல்வார் என திருப்பி கேள்வி கேட்டுள்ளார்.
இதைக்கேட்ட ரஜினி குடும்பம் கண்கலங்கயிது மட்டுமல்லாமல், இந்த விஷயம் ஐதராபாத்தில் உள்ள தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி வரை சென்றுள்ளது. இந்த ஒரு கேள்வி இருவர் மனதையும் பாதிக்கப்பட செய்துள்ளது மட்டுமல்லாமல் இருவரும் ஒன்று சேர யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மகன்களின் எதிர்காலம் கருதி இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்பு ரஜினி குடும்பம் மட்டுமல்லாது, தனுஷ் – ஐஸ்வர்யாவின் நலம் விரும்பிகளின் எதிர்பார்பாகவே இருந்து வருகிறது.