ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. முக்கியமாக அந்த 4 மாவட்டங்களில் : இனி சுலபம்தான் மக்களே!!
Author: Udayachandran RadhaKrishnan15 December 2023, 9:35 pm
ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. முக்கியமாக அந்த 4 மாவட்டங்களில் : இனி சுலபம்தான் மக்களே!!
புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் 4 மாவட்ட மக்களும் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார்கள்.
மழை பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவும், வெள்ளம் வடியவைக்கும் பணிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பார்க்காமல் ஒருவாரம் பணியாற்றியதால் சென்னை வேகமாக வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேநேரம் வெள்ளப்பாதிப்பால் பலர் உடமைகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த டோக்கன் தரும் பணிகள் நடந்து வரும் நிலையில் து ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் ஸ்டாலின் நிவாரணதொகை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிசம்பர் 17ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்தொகைகான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.