வாடகை கேட்ட உரிமையாளருக்கு கத்தரிக்கோலால் சரமாரிக் குத்து : டெய்லர் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2024, 11:32 am
வாடகை கேட்ட உரிமையாளருக்கு கத்தரிக்கோலால் சரமாரிக் குத்து : டெய்லர் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த அரசு என்பவருக்கு சொந்தமான கடையில் அதே பகுதியை சேர்ந்ர மகேஷ் (வயது 42) டைலர் கடை வைத்து நடத்தி வருகிறார்
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கடையைத் திறந்த மகேஷிடம் வீட்டின் உரிமையாளர் மூன்று மாத கடன் பாக்கியை தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்பொழுது ஆத்திரம் அடைந்த டைலர் மகேஷ் தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் அரசை கை முதுகு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அரசு ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்டுள்ளனர் உடனடியாக அங்கிருந்த அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அரசு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே மகேஷை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் தினத்தில் வாடகை கேட்கச் சென்ற வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது