‘கையிலே ஆகாசம்’ – வானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்; கனவை நனவாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்..!

Author: Vignesh
31 August 2024, 2:45 pm

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சியில் இரண்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற நீண்ட ஆசையை நிறைவேற்றும் வகையிலும், நன்கு கல்வி பயில சென்னை அண்ணா நூலகத்தை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கல்வியை ஊக்குவிக்க சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு 55மாணவ, மாணவிகளை விமானத்தில் பறக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School Students Air Travel

கோவை விமானநிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்த மாணவர்கள் அதனை வீடியோ எடுத்து தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் இதுவரை கீழே இருந்து வானில் பறக்கும் விமானத்தை பார்த்த காலம் மாறி நாங்களும் விமானத்தில் பறக்கிறோம் என இந்த வீடியோவை பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சென்னை சென்ற இந்த மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணித்து அண்ணா நூலகத்தை பார்வையிட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 274

    0

    0