கத்தியைக் காட்டி காதலியை அலேக்காக தூக்கிச் சென்ற காதலன்! சினிமா பாணியில் நடந்த இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்!

Author:
19 June 2024, 11:42 am

சென்னை சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் இளம் வயதுடைய அஜய். அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் அப்பெண்ணில் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த வேலையில் பெண்ணின் பெற்றோர்கள் மாரிமுத்து என்பவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பெண்ணுக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தன் வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்வை நடத்தியுள்ளனர். நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த போது அஜய் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அங்கு உள்ளவர்களை மிரட்டி தன் காதலியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தடுத்தபோது அஜய், ரோஹித் குமார் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்த ரோஹித் குமார் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் சம்மதத்தோடு தான் அஜய் அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…