பிறந்து 9 நாட்கள் தான்.. குழந்தையை கொன்ற பெற்றோர் : POISONஆக வந்த பப்பாளி பால்!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 1:08 pm

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சேட்டு மற்றும் அவரது மனைவி டயானா ஆகியோருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

பிறந்த பெண் குழந்தையை பப்பாளி பால் கொடுத்து கொலை செய்து புதைத்து விட்டு தப்பிச் சென்ற இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் பெரிய ஏரி ஊர் பகுதியில் அவர்களுடைய உறவினர் உமாபதி என்பர் வீட்டில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை சேட்டு என்கின்ற ஜீவாவின் தாயார் பேபியையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உறவினர் உமாபதியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 192

    0

    0