புதிய மைல்கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய கோவை மக்கள்… வைரலாகும் புகைப்படம்..!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 9:55 pm

கோவை : புதிய மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை கோவை கிராம மக்கள் வழிபாடு நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவபட்டியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் புதிய மைல் கல் நட்டு வைத்தனர். அதில் சிறுவாணி 20 கிலோ மீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சினிமா பட பாணியில் அந்த மைல் கல்லை தண்ணீர் ஊற்றி, மாலை அணிவித்து, அலங்காரம் செய்து படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடினர்.

இந்தப் புகைப்படங்களை அப்பகுதி உள்ள ஒரு சில மக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!