நேரில் வந்த மாதிரியே இருக்கு… கருணாநிதியின் உருவப்படத்தை பார்த்து சிலாகித்த திருவாரூர் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 9:59 am

முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுயர திருவுருவ படத்திற்கு வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கலைஞரை நேரில் பார்ப்பது போல இருப்பதாய் என்று கூறி சில நிமிடங்கள் அமைதியாக அங்கேயே நின்று மரியாதை செலுத்தினர்.

மேலும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் அருமையாக அலங்கரிக்கப்பட்ட கலைஞர் இல்லம் முன்பு மரியாதை செலுத்தி செல்கின்றனர்.

இதே போன்று சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் திறந்து வைத்த காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கழக வண்ணமான கருப்பு சிவப்பு வண்ண பலூன்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை பொதுமக்கள் பலர் தூவி மரியாதை செலுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!