பரப்புரை நேரம் முடிந்தும் இரவு 11 மணி வரை காத்திருந்த மக்கள் : டிடிவி தினகரனை நெகிழ வைத்த கிராம மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 8:59 am

பரப்புரை நேரம் முடிந்தும் இரவு 11 மணி வைர காத்திருந்த மக்கள் : டிடிவி தினகரனை நெகிழ வைத்த கிராம மக்கள்!

தேனி மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

திங்கட்கிழமை மாலை இரண்டாம் கட்ட பரப்புரையை பெரியகுளத்தில் இருந்து துவக்கினார். 14 இடங்களில் தினகரன் பேசுவாத இருந்தது. ஆனால் எருமலைநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, எ. புதுப்பட்டி ஆகிய 3 இடங்கள் மீதமிருக்கும் போதே தேர்தல் ஆணைய விதிமுறைப்படி 10 மணி அளவில் பரப்புரை நேரம் ஓய்ந்தது.

ஆனால் தேவதானப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில்
வேனில் இருந்தவாறே, சாலையின் இருபுறமும் கூடி நின்ற வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையசைத்தவாறும் கரம் கூப்பி காத்திருந்த பொதுமக்களிடம் கை அசைத்து சென்றார் டிடிவி தினகரன்.

எனவே பரப்புரை நேரம் ஓய்ந்தாலும் மணிக் கணக்கில் கால் கடுக்க காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியோர் என பொதுமக்களும் வாக்காளர்களும் தினகரனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

ஒரு கட்டத்தில், பேசி விட்டே செல்ல வேண்டும் என அவரது வாகனம் முன் கூடியும் அவர் வாகனத்தை மறித்தும் தொண்டர்கள் உணர்ச்சி வயப்பட்டனர்.

ஆனாலும் தேர்தல் விதிமுறைகளை மீறக்கூடாது என்பதற்காக டிடிவி தினகரன் கிராம மக்களின் வரவேற்பை ஏற்று அவர்கள் வழங்கிய சால்வைகள் மற்றும் கிரீடங்களை பெற்றுக் கொண்டு வாகனத்தில் இருந்தவாறு கையசைத்ததோடு மீண்டும் தேர்தல் பரப்புரைக்கு நேரத்துடன் வந்து உங்கள் மத்தியில் பேசுகிறேன் என கூறிச் நிர்வாகிகளிடம் கூறிச் சென்றார்.

தேர்தல் பிரச்சாரம் நேரம் முடிவடைந்தும் இரவு 10 மணிக்கு மேல் ஒரு மணி நேரமாக 11 மணிவரை டிடிவி.தினகரனின் பேச்சைக் கேட்காவிட்டாலும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் காத்திருந்தது டிடிவி தினகரனை நெகிழ வைத்தனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 265

    0

    0