திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சி தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுக கட்சியை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. அதிமுகவிற்கு அச்சாரமாக விளங்கியது திண்டுக்கல்.
அதிமுக ஆட்சி மக்களாட்சியாகும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 100க்கு 100 வாக்குறுதிகள் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான் எனவும்,தாலிக்கு தங்கம் திட்டத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியது ஜெயலலிதா தான். திருமண உதவி தொகையை 12 ஆயிரமாக இருந்ததை 18 ஆயிரமாக உயர்த்தியது எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக கொடுக்கபட்டது. திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக வழங்கவில்லை, திமுக பொங்கல் பரிசு வழங்கிய அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது. திமுகவுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. நீட் தேர்வில் தமிழக முதல்வர் மாயாஜாலம் செய்து பார்க்கிறார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்க்கு மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்திலும் அதிமுக தான் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் இல்லை, இன்னும் கொஞ்சம் நாளில் எந்த மந்திரியும் வீதிக்கு வர முடியாது. இழந்த ஆட்சியை மீண்டும் பெற இப்ப நல்ல காலம் வந்துள்ளது. மக்களுக்கு நல்ல ஆட்சியாக இந்த ஆட்சி விடியவில்லை. தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். நடைபெற பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நூற்றுக்கு நூறு வெற்றி பெறும் எனவும் பேசினார். இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.