அமலாக்கத்துறை கேட்ட அனுமதி… அதிர்ச்சி கொடுத்த நீதிபதி : அங்கித் திவாரி வழக்கில் அதிரடி திருப்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan12 January 2024, 2:19 pm
அமலாக்கத்துறை கேட்ட அனுமதி… அதிர்ச்சி கொடுத்த நீதிபதி : அங்கித் திவாரி வழக்கில் அதிரடி திருப்பம்!!
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்காக மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை ஏற்கனவே 3 முறை வேறு தேதிக்கு ஒத்தி வைத்த நிலையில், இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இருதரப்பு வாதங்களையும் விசாரித்துள்ள நீதிபதி மோகனா இன்று அமலாக்கத்துறை சார்பில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அளித்திருந்த மனு இன்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மோகனா உத்தரவு.