சர்கார் படம் போல் கள்ள ஓட்டு போட்ட நபர்.. இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு… கரூரில் பரபரப்பு

Author: kavin kumar
19 February 2022, 10:44 pm

கரூர் : கரூரில் பாலசுப்ரமணி என்பவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டுச் சென்று விட்டதால், தான் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் புனித கார்மேல் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் வார்டு எண் 12ல், 38 எம் வக்குச்சாவடியில் மாலை 5.45 மணியளவில் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சார்ந்த பாலசுப்ரமணி (48) என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். நீண்ட வரிசையில் நின்று அவருடைய வாக்குச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டையை வாக்கிச்சாவடி அலுவலரிடம் காண்பித்துள்ளார். அவருடைய பெயர் படிக்கப்பட்டது. ஆனால், அவருடைய ஓட்டை ஏற்கனவே பாலசுப்ரமணி என்பவர் ஓட்டு போட்டு விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பாலசுப்ரமணி, நான் அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும், எனக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்,கேட்டுவாக்களித்து விட்டு தான் செல்வேன் என வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குப் பதிவு நேரம் முடிவடைந்ததால் அங்கு வாக்களிக்க காத்திருந்த பொதுமக்கள் 32 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசாரும், வாக்குச் சாவடி தலைமை அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்னனு வாக்கு இயந்திரத்தில் ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்க வாய்ப்பு அளிப்பதாக எடுத்துக் கூறினர். ஆனால், அவர் ஏற்க மறுத்து மின்னனு வாக்கு இயந்திரத்தில் தான் வாக்களிப்பேன், என் வாக்கை பதிவு செய்தவர் யார் என்பதை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தன்னிடம் காட்டும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதால் அதுவரை வெளியில் காத்திருக்கும்படி பாலசுப்ரமணியை அனுப்பி வைத்து விட்டு வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. அப்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, பாலசுப்ரமணியை தேட்டிய போது அவர் வாக்குப் பதிவு மையத்தில் இல்லாததால் வாக்குப் பதிவை முடித்தனர் அதிகாரிகள்.

அதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் கரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வைப்பதற்காக எடுத்துச்சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுமட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் வாக்கினை மற்றொருவர் பதிவிட்டு சென்ற காட்சிகளை போல கரூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1450

    0

    0