சிலப்பதிகார ஓவியங்களை தார் ஊற்றி அழிக்கும் நபர்.. விசாரணையில் ஷாக்… : கோவையில் அதிர்ச்சி…!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 8:06 pm

சிலப்பதிகார குறிப்பில் காணப்படுகின்ற வண்ண ஓவியங்கள் பாலத்தின் சுவர்களில் வரையப்பட்டு வந்த நிலையில் மர்ம நபர் சுவற்றின் மேலே தார் ஊற்றி ஓவியங்களை அவமதிதுள்ளார்.

கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் போஸ்டர் கலாச்சாரத்தை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பில் சிலப்பதிகாரம், கண்ணகி, கோவலன் காட்சிகளை குறிப்பிடும் விதமாக வரைய பட்டு இருந்தது.

இது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்று வந்த நிலையில் இன்று மர்ம ஆசாமி ஒருவர், காந்திபுரம் மேம்பாலம் தூண்களில் வரையப்பட்டு வந்த ஓவியங்களை தார் ஊற்றி ஓவியங்களை சேதப்படுத்தியுள்ளார்.

விசாரணையில், அந்த நபர் வேல்முருகன் என்பதும், கோவை விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி என்பதும் தெரியவந்தது.

மக்களின் ஐந்தொழிலில் ஒன்றான பொற்கொல்லரை இழிவுப்படுத்தி தவறாக சித்தரித்து கோவலன் மரணத்திற்கும், திருடியதற்கு பொற்கொல்லர்கள் தான் காரணம் என்று ஓவியங்கள் தவறாக வரைந்து உள்ளார்கள்.

கோவை மாவட்டத்தில் ஐந்தொழில் செய்யக்கூடிய விஸ்வகர்மா மக்கள் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். குறிப்பாக கோவை மாநகர மைய பகுதியில் மட்டும் 4 லட்சம் பேர் தங்க நகை தொழில் செய்யும் பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் விஸ்வகர்மா மக்கள் முன்னேற்றத்திற்கு என்று பல நல திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் திமுகவின் பெயரைக் கெடுக்கும் விதமாக கோவை மாவட்டம் நிர்வாகம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளதாக கூறி வேல்முருகன் என்பவர் ஓவியங்களை தார் ஊற்றி அழித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Adult Comedy Movie Perusu First Day Collection பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!