நடிகர் விஜய் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபர்-வெளியான பரபரப்பான தகவல்.!

Author: Rajesh
18 June 2022, 4:15 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பனையூரில் அலுவலகம் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை அந்த வளாகத்தில் ஒருவர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள பெரிய பங்களாவில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வரும்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான பிரபாகரன், என்ற பெயின்டர் ஒரு மாதமாக பங்களாவில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு குடிபோதையில் பரோட்டா வாங்க சூப்பர்வைசரிடம் நூறு ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், மறுநாள் காலை 8 மணியளவில் பிரபாகரன் கையில் சிறிது பரோட்டா மற்றும் வாயிலும் பரோட்டா இருந்தபடி உயிரிழந்து கிடந்துள்ளார், இதனை பார்த்த அலுவலக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்ற பொலிசார், மதுபோதையில் அளவுக்கு அதிகமான மது போதையில் பரோட்டா சாப்பிட்டதில் மூச்சு குழாயில் பரோட்டோ அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ