கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்கை காட்டிய நபர் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்…
Author: kavin kumar28 February 2022, 4:23 pm
கோவை : கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்கை காட்டி, அவர்களை செல்போனில் வீடியோ எடுத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் மகளிர் கல்லூரி செயல்படு வருகிறது. இங்கு கல்லூரி வகுப்பு முடிந்த பின்பு வழக்கம் போல் மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்த மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டியதோடு அரை நிர்வாணத்துடன் நின்றுள்ளார்.
தொடர்ந்து மாணவிகளை தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார்.இதனை அறிந்த பொது மக்கள் அரை நிர்வாணமாக நின்று இருந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.தொடர்ந்து அந்த நபரின் செல்போனை பிடிங்கிய மக்கள் சாயிபாபா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.