செய்யறது திருட்டு.. இதுல Decent வேற : பட்டப்பகலில் பைக்கை அலேக்காக திருடிய நபர் : அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2023, 7:17 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் செட் உள்ளது.

நேற்று நியூ இயர் என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. கடை முன்பு அவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். நேற்று மாலை வெளியில் வந்து பார்த்த பொழுது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது நேற்று மதியம் 2:30 மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சிறிது நேரம் அங்கு நின்று யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டவர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்றார்.

இது குறித்து விஜயன் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

https://vimeo.com/785716963

பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!