வாசப்படியை தாண்டி வரக்கூடாது.. நாகப்பாம்பை வாசலோடு தடுத்து நிறுத்திய செல்லப்பிராணி.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 8:57 am

வாசப்படியை தாண்டி வரக்கூடாது.. நாகப்பாம்பை வாசலோடு தடுத்து நிறுத்திய செல்லப்பிராணி.. வைரலாகும் வீடியோ!!

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்து கொண்டு இருந்தது.

அப்பொழுது அந்த பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முற்பட்டிருக்கின்றது. நாகபாம்பு வீட்டிற்குள் நுழைய முற்பட்ட நிலையில், வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கின்றது.

பூனை சீறலை அறிந்தவுடன் வீட்டில் உள்ளவர்கள் கதவை மூடியிருக்கின்றனர். அப்போது பாம்பு வீட்டுக்குள் வந்ததை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் தரப்பட்டது.

பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார். முன்னதாக பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.

https://vimeo.com/887109554?share=copy

செல்லப்பிராணியான பூனை, வீட்டுக்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியது நெகிழ்ச்சிக்குரிய விடயமாக பார்க்கின்றனர். பாம்புவும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!