பதனி பதனி.. மது குடித்து மல்லாக்க படுத்த பதனி விற்பனை செய்தவரின் பரிதாப நிலை : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2022, 1:54 pm
திண்டுக்கல் : பழம் நழுவி பாலில் விழுந்தது போல பதனி விற்பனை செய்பவர் பனகள்ளு பானையுடன் டாஸ்மாக் கடையில் விழுந்து பாடிய பாடல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோயில் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருந்து வருகிறது. இந்த பனை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் நுங்கு பனம்பழம் ஆகியவைகளை சுற்றுப்பகுதியில் வியாபாரம் செய்து வருவது வழக்கம்
இதில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பனை மரத்தில் ஏறி குடுவைகளை கட்டி பதனி மற்றும் பனகள்ளு இறக்குவது வழக்கமாக செய்து வந்தார்.
தமிழக அரசு கள் விற்பனைக்கு அனுமதி வழங்காத நிலையிலும் மருத்துவத்திற்கு என்ற வகையில் ஒருசில பாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டும் பானையில் பனை ஓலையைக் கட்டி வைத்து விற்பனை செய்து வந்த நபர் தனக்கும் போதை தேவை என்று வேடச்சந்தூர் ஆத்துமேடு பழனி சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு மல்லாந்து கிடந்து பாடல் பாடியது பார்ப்போரை நகைக்க செய்தது.
இதைத்தான் பழம் நழுவி பாலில் விழுந்த கதை போல் கல்வாரி டாஸ்மார்க் கடையில் கூப்பிடுகிறார் என்று கேளிக்கை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் அரசு டாஸ்மார்க் கடையில் விற்பனையாகும் மதுவினால் போதை தலைக்கேறி ஆங்காங்கே கிடைக்கும் நிலையை மாற்ற இயற்கையாக உற்பத்தியாகும் பதனி மற்றும் பனங்கள்ளு ஆகியவைக்கு தடையில்லாமல் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
0
0