பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் முடக்கம்? திமுக மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2023, 2:11 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குண்டான பூத் கமிட்டி அமைப்பது குறித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக ஆட்சியில் 75 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கியுள்ளதாகவும் தற்போது உள்ள திமுக ஆட்சி அதை இரண்டு ஆண்டு காலம் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தி காட்டியவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்யா சிவராஜ், மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்