கட்டம் கட்டும் காவல்துறை… கூண்டோடு சிக்கும் நெட்வொர்க் : கோவை நடுநடுங்கும் ரவுடிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2023, 5:06 pm

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ரவுடி கும்பலை ஒடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை குற்றப்பின்னணியில் உள்ளவர்களை கூண்டோடு கைது செய்யும் போலிஸார்.

இளம் பெண்களும் ரவுடிசத்தில் ஈடுபடுபது போலீசார் விசாரணையில் அம்பலமான நிலையில் தலைமறைவான ரவுடி நெட்வொர்க்கை பிடிக்க தனிப்படை நேரடியாக கோவைக்கு வராமால் சோசியல் மீடியாவுல் லோக்கல் தாதாக்களை வழி நடத்துகின்ற மெயின் தாதாக்களை பிடிக்க தனிப்படை போலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

மூன்றே நாளில் 48 ரவுடிகளை சிறைக்கு அனுப்பிய போலிஸார் இன்ஸ்டாகிராமில் மிரட்டலான வீடியோக்களை ஆயுதங்களுடன் வெளியிட்டு அச்சுறுத்தியவர்கள் மட்டும் 15 பேர் ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.

ஒவ்வொறு ரவுடிக்கும் தனித்தனியாக ஹிஸ்ட்ரீ ஷீட் தயாரிக்கும் காவல் துறை பட்டியல் போட்டு கட்டம் கட்டி தூக்க காவல் துறை முடிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் நாட்களில் அடுத்தடுத்த இரண்டு கொலைகள் கொடுரமாக அரங்கேறியிருந்தன. பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சத்திய பாண்டியன் என்ற ரவுடி கட்டப்பஞ்சாயித்து காரணமாக சஞ்சய் தலைமையிலான ரவுடி கும்பலால் நடுத்தெருவில் விரட்டி விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றிருக்கின்றனர்.

துப்பாக்கியால் சுட்டதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்தன. அதற்கு அடுத்த நாள் காலை கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தின் பின்புறம், குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கோகுல் என்ற ரவுடியை ஜோஸ்வா, கெளதம் உள்ளடக்கிய ரவுடி கும்பல் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரிவாளால் ஓட ஓட வெட்டி அசால்ட்டாக நடந்து சென்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து நடத்திய விசாரனையில் இரு கொலைகளும் பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேறியழ அம்பலமானது.

இந்த நிலையிலே ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன், ரவுடி கும்பல்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கின்றார்.

அதனடிப்படையிலே கோவை மாநகர் முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்திற்கிடமானோர் வீடுகளில் தணிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து கோவையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலையும் தயார் செய்த காவல்துறை 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் 10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து 48 ரவுடிகளை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

இதில் சில ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரமெழுதி பெறபட்டிருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த ரெய்டில் கத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கஞ்சா விற்பனை , போதை பொருட்கள் விற்பனை, கொலை , கொள்ளை, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் உள்ள முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர்.

அவர்கள் கோயமுத்தூருக்கு வராமலே சோசியல் மீடியா மூலமாக லோக்கல் தாதாக்களை வழிநடத்தி வருகின்றனர். இந்த குற்ற செயல்களில் இளம் பெண்களும் ஈடுபடுவது போலிஸாரின் விசாரணையில் தெரியவந்தன.

அந்த முக்கிய நெட்வொர்க்கை பிடிக்க தனிப்பட்டை அமைக்கப்பட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் இவர்களை ஹீரோவாக பார்க்கும் விதமாக சோசியல் மீடியாவில் ரவுடிகள் ரீல்ஸ் வெளியிட்டு தங்கள் பக்கமாக ஈர்த்திருக்கின்ற நிலையில் ஒட்டுமொத்த ரவுடி நெட்வொர்க்கையும் முடக்க போலிஸார் முனைப்புடன் நடவடிக்கையில் ஈடுபட்டுகின்றனர் .
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையில் ரவுடியிசம் செய்யும் ரவுடிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் எச்சரித்திருக்கின்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட 15 ரவுடிகளை ஒரே நாளில் காவல் துறை சிறைக்கு அமுப்பியிருக்கின்றன. ரவுடிகளின் பட்டியலை தயார் செய்துவருகின்ற போலிஸார் தனித்தனியே ஒவ்வொறு தாதாக்களுக்கும் ஹிஸ்டிரி ஷீட் தயாரித்து கட்டம் கட்டி தூக்க காவல் துறை தயாராகியிருக்கின்றது.

தாதாக்களை கண்காணிக்க உளவுத்துறை போலீஸார் நியமிக்கப்பட்டு சமூக வலைதள பக்கங்கள் போலிஸாரால் நோட்டமிடப்பட்டு வருகின்றன.

  • Actress Suvalakshmi Latest News 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
  • Views: - 719

    0

    0