திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் : அதிர்ந்த நீலகிரி… டாஸ்மாக் கடையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 8:59 am

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில், கொள்ளையன் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!