பாஜகவினரை ஓட ஓட விரட்டி கைது செய்த போலீசார்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2024, 1:44 pm
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலமானது கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்து தற்போது ஒரு வருடம் ஆகிறது.
இதனை கண்டித்து பாஜகவினர் இன்று பாலத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்திற்கு அறிவித்திருந்த நிலையில் போலீசார் மற்றும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த பாஜகவினரை போலீசார் விரட்டி விரட்டி பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.