நடவடிக்கை எடுக்காத போலீஸ்.. காவல் நிலையம் முன்பு மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
6 ஜூன் 2024, 7:41 மணி
Nagoor
Quick Share

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவரது மனைவி சுல்தானி பீவிக்கும் குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி பனங்குடி பகுதியில் உள்ள தனது பெரியப்பா மகள் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிது.

இந்த நிலையில் சுல்தானி பீவி அங்கிருந்து திருப்பூர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுல்தானி பீவியை அவரது அக்கா மகன் சர்தார்தான் திருப்பூருக்கு பேருந்து ஏற்றிவிட்டுள்ளார் எனக் கூறி அவர் மீது நாகூர் காவல்நிலையில் ஜெகபர் சாதிக் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை நேற்று காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரனை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காவல் நிலையத்திற்கு வந்த ஜெகபர் சாதிக் குடும்பத்தினர் சர்தாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் 3பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காவல் நிலையம் முன்பு திடிரென மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், தீக்குளிக்க முயன்றவர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று சமாதனப் படுத்தினர்.

மேலும் படிக்க: கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட CSIF பெண் அதிகாரி.. விமான நிலையத்தில் அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு ஆதங்கம்!

நாகூரில் போலீசாரை கண்டித்து காவல்நிலையம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 287

    0

    0