பிளக்ஸ் பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு.. நிர்வாகியை தாக்கியதால் கொந்தளித்த இந்து முன்னணி… மறியலால் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 4:24 pm

பிளக்ஸ் பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு.. நிர்வாகியை தாக்கியதால் கொந்தளித்த இந்து முன்னணி. மறியலால் பதற்றம்!!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு நாளை நடைபெறுகிறது.

இதனையொட்டி புளியம்பட்டியில் பிளக்ஸ் வைப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் இன்று இந்து முன்னணி அமைப்பினர் பிளக்ஸ் வைத்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் பேனர் வைக்க அனுமதி இல்லை என கூறி தடுத்துள்ளனர். அதற்கு இந்து முன்னணியினர் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முறையாக அனுமதி பெற்றுள்ளோம். இதுகுறித்து எஸ்.பி. சிஜடியிடம் கேட்டு பாருங்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அங்கிருந்த போலீசார் அனுமதி மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி அமைப்பினர் ஒருவரை போலீசார் தாக்கியதால் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 2071

    0

    0