திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்.. நடுரோட்டில் களேபரம் : வைரலாகும் VIDEO!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 2:35 pm

திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்.. நடுரோட்டில் களேபரம் : வைரலாகும் VIDEO!!

கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பிஎன் புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு அப்பால் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தனர். இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கட்சி சின்னத்தை மறைத்து வைத்தனர். தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: வாக்குச்சாவடி மையத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி.. மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஜக புகார்!

இதில் அங்கு இருந்த உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும், திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உதவி கமிஷனர் நவீன் குமார் திமுக பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கியதாக தெரிகிறது.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!