சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை ஷூவை கழட்டி அடிக்க சென்ற காவலர் : ஷாக் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 1:13 pm

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அதற்கான படத்தை கொடுக்காமல், கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2 ஆம் தேதி சாப்பிட்டுவிட்டு, பணம் நாளை தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

நேற்று மாலை 4 மணிக்கு உணவு சாப்பிட வந்த காவேரி, சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் முத்தமிழ் என்பவர், நேற்று சாப்பிட்டதில் நிலுவை தொகை கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு, கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரத்தில் காலில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க சென்றுள்ளார். ஆனால் அருகில் இருந்தவர்கள் தடுத்ததால், அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது‌. மேலும் காவலர் சீருடையில், இருக்கும் ஒருவர், ஓட்டல் உரிமையாளிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை வீசிவிட்டு, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சம்பவம் பெரும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 365

    0

    0