சினிமாவை விஞ்சும் சேசிங்… ஏடிஎம் கொள்ளையனை விரட்டி பிடித்த காவல்துறை…! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!

Author: kavin kumar
27 February 2022, 2:03 pm

வேலூர் : பல மாதங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ஏடிஎம் கொள்ளையனை சினிமா பட பாணியில் துரத்திப் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் காட்பாடி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெங்களூரு மாநிலம் வெங்கட்ராமப்பாவின் மகன் திம்மராயப்பா என்பவன் ஏடிஎம்களை பழுதாக்கி அதில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் குற்றவாளியை பிடிக்க சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் காட்பாடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை நடத்த முயன்றனர். அப்போது அந்த நபர் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட்ட திம்மராயப்பா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 56 ஏடிஎம் கார்டுகள், 300 ரூபாய் ரொக்கப்பணம்,

ஒரு இரு சக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இவர் மேலும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து விருதம்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பட பாணியில் ஏடிஎம் கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!